தாண்டிக்குடி கோயில் விழாவில் பக்தர்கள் சேத்தாண்டி வேடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2022 08:12
தாண்டிக்குடி ,தாண்டிக்குடியில் கோயில் விழாவில் பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நகர்வலம் வந்த வினோத விழா நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் விழாவில் முதல் நாள் நிகழ்வாக பக்தர்கள் ஊர் கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் மண் சேர்களை பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து ஊர் மந்தையிலிருந்து நகர்வலம் வந்து ஆடல் பாடலுடன் பல்வேறு சாயா பூச்சுகளை பூசி மேளத்திற்கு ஏற்றவாறு உற்சாக நடனமடி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில்: , தொன்று தொற்று மலை கிராமங்களில் இதுபோன்று வயல்வெளியில் உள்ள மண்ணை இலகுவாக நொதிக்க செய்து அவற்றின் சேர்களை ஊர் பெரியவர்களின் முன்னிலையில் பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவர். இதுபோன்ற நேர்த்திக்கடனால் உடலில் உள்ள தோல் நோய்கள் மற்றும் இதர வகை நோய்களை இவ்வகை மண் கட்டுப்படுத்தும் என்பது ஐதீகம். இந் நடைமுறை மேலை நாடுகளான ஜப்பான், சீனாவில் இன்றளவும் வணிக நோக்கில் கடைப்பிடிக்கின்றனர். நம் முன்னோர்கள் துவக்க முதலே இது போன்ற நடைமுறைகளை சுவாமிக்காக செலுத்தி வந்ததால் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வருகின்றனர். இதுபோன்ற இத் திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனமாடி கிராமத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது சமுதாய ஒற்றுமையை வெளிக் கொணர்வதாக உள்ளதாக கூறினர்.