பழநி: பழநியில் ஐயப்ப பக்தர்கள், விடுமுறை நாள் முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது.
பழநியில் மலைக் கோயிலுக்கு சபரிமலை ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்திலிருந்து அதிக அளவில் தனியார் வாகனங்களில் வந்தனர். வெளியூர் வெளி மாநில முருக பக்தர்கள் வருகையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிக அளவில் வருகை புரிந்தனர். மலைக்கோயிலில் காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் வந்த வெளி மாநில வாகனங்கள் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியதால், கிரி வீதியில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அருள்ஜோதி வீதி, அய்யம்பள்ளி ரோடு சன்னதி வீதி பூங்கா ரோடு ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, கிரி வீதியில், தட்டு வியாபாரிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகளால் பக்தர்களுக்கு தொல்லை ஏற்பட்டது.