சிவன் கோயில்களில் கார்த்திகை கடைசி சோமவார சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2022 03:12
நயினார்கோவில்: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் மற்றும் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில்களில் கார்த்திகை கடைசி சோமவார சங்காபிஷேகம் நடந்தது.
*எமன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்கும் வகையில் எமனேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வழிபட்டார். இங்கு வழிபடுவோருக்கு மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம். இச்சிறப்பு வாய்ந்த கோயிலில் இன்று காலை 10:00 மணி தொடங்கி, 108 சங்காபிஷேக ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து 11:30 க்கு மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் பால், பன்னீர், இளநீர் மற்றும் தீர்த்த கலசங்கள் உட்பட 108 சங்குகளில் இருந்து புனித தீர்த்தங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரங்கள் நிறைவடைந்து, தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
* நயினார்கோயிலில் நாகதோஷம் உட்பட அனைத்து வகையான தோஷங்களும் நீக்கும் நாகநாத சுவாமிக்கு, சங்காபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மகா பூர்ண பகுதிக்கு பின் 108 சங்குகளில் இருந்து புனித தீர்த்தங்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.