கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
* கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.