பதிவு செய்த நாள்
13
டிச
2022
06:12
கருமத்தம்பட்டி: சின்ன மோப்பிரிபாளையம் ஐஸ்வர்ய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.
சின்ன மோப்பிரிபாளையம் ஐஸ்வர்யா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்ய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 10 ம்தேதி மாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புனித நீர் கலசங்கள் அமைக்கப்பட்டு, முதல் கால ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 11 ம்தேதி காலை, இரண்டாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, 8:30 மணிக்கு, ஐஸ்வர்ய விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், பவளக்கொடி கும்மியாட்டம், வேலவன் காவடி குழுவினரின் காவடியாட்டமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.