பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் 21 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.
இக்கோயிலில் அனுமார் புளிய மரத்தில் புனித புளி ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். இங்கு அனுமாருக்கு சிலை வழிபாடு இன்றி, புளிய மரமே அனுமாராக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. அருகில் ராமர், சீதை, லட்சுமணன் தனிச்சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். தொடர்ந்து இன்று காலை 8:30 மணி தொடங்கி 12:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி தொடங்கி இரவு 8:00 மணி வரையிலும் சீதாராமருக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. அப்போது துளசி மற்றும் குங்குமத்தால் அர்ச்சகர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர். இரவு அனுமன் பக்தி உலா நிறைவடைந்து, தீபாராதனைகளுக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இக்கோயிலில் டிச., 23 அன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.