நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.12.54 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2022 03:12
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடந்த உண்டியலில் ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 854 காணிக்கையாக கிடைத்தது. நெல்லையப்பர் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி 21உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 3 மாதத்திற்கு பிறகு நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் நாகர்கோவில் உதவிக் கமிஷனர் தங்கம், மேற்குபிரிவு ஆய்வர் தனலெட்சுமி, கங்கைகொண்டான் ஆய்வர் முருகன், நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி பங்கேற்றனர். நெல்லை ஜங்ஷன் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம், ராஜபாளையம் ராஜகோபுரம் குழுவினர் பங்கேற்றனர். இதில் ரூ.12 லட்சத்து 54ஆயிரத்து 854 ரொக்கம், 525.700 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்கள், 230 கிராம் எடையுள்ள வெள்ளி இனங்கள், வெளிநாட்டு பணத்தாள் 17ம் கிடைக்கப் பெற்றன.