சதுரகிரியில் மார்கழி பிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2022 07:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளை மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் வனத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயில் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது.