பதிவு செய்த நாள்
15
டிச
2022
11:12
திருச்செந்துார்: தமிழ் மாதம் மார்கழி பிறப்பை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (16ம் தேதி) முதல் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் மாதங்களில், தெய்வீக மாதமாக மார்கழி கருதப்படுகிறது. வழிபாட்டிற்கு உகந்தமாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு, நாளை( 16ம்தேதி ) முதல் , திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் பூஜை காலங்கள் மாற்றப்படுகிறது. நாளை முதல் அதிகாலை 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 7:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8:45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
இரவு 7:30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும். இந்த பூஜை கால மாற்றம் ஜன., 14ம் தேதி வரைஅமலில் இருக்கும். ஆங்கிலபுத்தாண்டு தினமானஜன., 1ம் தேதி, அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆருத்திரா தரிசனத்தை முன்னிட்டு, ஜன., 6ம் தேதி மட்டும் கோவில் நடை அதிகாலை 2:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் , தைபொங்கல் தினத்தன்று (ஜன. , 15ம் தேதி ) கோவில் நடை அதி காலை 1 : 00 மணிக்கு திறக்கப்படுகிறது என, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.