அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் தர்மசாஸ்தா கோயில் 50வது பொன்விழா ஆண்டு உற்ஸவ விழா டிச.,11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச.,14 கிராம தெய்வ வழிபாடு, 108 கோ பூஜை நடந்தது. டிச.,15ல் கலச பூஜை, வேள்வி வழிபாடு நடந்தன. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து சபரிமலை ஐயப்பனை வளர்த்த பந்தள மன்னர் பரம்பரை வம்சா வழியினர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இன்று(டிச.,17) திருவிளக்கு பூஜையும், நாளை(டிச.,18) இரவு 7:00 மணிக்கு அலங்கார பூப்பல்லக்கு நகர்வலம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் பக்தி பணி, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.