திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் டிச.,23 முதல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2022 03:12
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல் பத்து உற்ஸவம் டிச. 23 (மார்கழி 8) அன்று துவங்குகிறது. வரக்கூடிய 2023 ஜன., 2 திங்கள் கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு சயனத்திருக்கோலமும், மாலை 7:00 மணிக்கு பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜன., 2 இரவு முதல் ஜன., 11 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் கிரிதரன், பேஸ்கார் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.