திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழூர் அகரம் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்ட சேஷாத்திரி சுவாமி மணிமண்டபத்தில், நடந்த ஆராதனை விழாவில் சேஷாத்திரி சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.