திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் நேற்று மாலை புறக்காவல் மையம் திறக்கப்பட்டது.
புறக்காவல் மையத்தை மாநகர போலீஸ் கமி~னர் திரு.கார்த்திகேயன் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், “ வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. பகல் பத்து, இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள், கூடுதலாக 92 கேமராக்கள் மூலம் கட்டுப்பாடு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசாரின் உதவியுடன் கூட்ட நெரிசலை கண்காணித்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விழா நாட்களில் காவிரி பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு போலீசார் பணியில் இருப்பார்கள். பரமபதவாசல் திறப்பின் போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் போலீஸ் உயரதிகாரிகள், ரங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரி திரு.செ.மாரிமுத்து, அர்ச்சகர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.