கடலாடி: கடலாடி அருகே மேலக்கடலாடியில் உள்ள பாதாள காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் பாதாள காளியம்மன், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, வீரபத்திரர், சோனைக்கருப்பு உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.