பதிவு செய்த நாள்
25
டிச
2022
08:12
பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு ராஜகோபுர தங்க கலசங்கள் தூய்மைப்படுத்தும் செய்யும் பணி நடைபெற்றது.
பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோயில் சுதை சிலைகள் புனரமைத்தல், வர்ணம் பூசுதல், கோபுரங்கள் சீரமைத்தல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷப் பணிகள் பெருமளவில் நடைபெற்ற நிலையில் இன்று (டிச.25) மூகூர்த்தகால் நட திட்டமிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேக முகூர்த்தகால் நடுதலில் மலைக்கோயிலில் பாரவேல் மண்டபத்தில் விநாயகர் வழிபாடு, புனித சொல் மொழிதல், திருக்கம்ப வழிபாடு, பேரொளி வழிபாடு, திருக்கம்பம் திருக்கோயில் வலம் வருதல், காலை 8:00 மணிக்கு நடைபெறும். திருக்கம்பம் நாட்டுதல், வெள்வி சாலை திருக்கம்பம் நாட்டுதல், பேரொளி வழிபாடு, மூலவரிடம் விண்ணப்பம் செய்தல், திருவமுது வழங்குதல், ஆகியவை காலை 9:30 மணிக்கு நடை பெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராஜகோபுரம் மீதுள்ள தங்க கலசங்களை தூய்மை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று (டிச.24.,) அதிகாரிகள் முன்னலையில் பணியாளர்கள் மூலம் தங்க கோபுர கலசங்களை கோபுரத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. அவற்றை தூய்மை செய்யும் பணிகள் நிறைவு பெற்றபின் மீண்டும் பொருத்தப்பட உள்ளது.