பதிவு செய்த நாள்
25
டிச
2022
01:12
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து 3ம் நாளான இன்று ஸ்ரீநம்பெருமாள் நாச்சியார் திருமொழி பாசுரத்திற்கு ஏற்க , சௌரிக் கொண்டை அணிந்து, கலிங்கத்துராய்-சந்திர சூரிய வில்லை, நெற்றிச் சரம், ரத்தின அபயஹஸ்தத்துடன், தாமரைப்பூ வர்ண வஸ்திரம், அடுக்கு பதக்கங்கள், தங்கப்பூண் பவள மாலை, ஐம்படை ஹாரம், 2 வட பெரிய முத்து சரம், புஜ கீர்த்தியை முன் மார்பில் சாற்றிக் கொண்டு, இடுப்பில் அரைச்சலங்கை, வலது திருக்கையில் நாச்சியாரின் கோலக்கிளியுடன், பின் சேவையாக அண்டபேரண்ட பக்க்ஷி பதக்கத்துடன், சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.