பதிவு செய்த நாள்
26
டிச
2022
09:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து நான்காம் திருநாளில் அர்ஜுன மண்டபத்தில் நாச்சியார் திருமொழி கண்ணன் என்னும் கருந்தெய்வம் பாசுரத்திற்கு ஏற்ப, ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம் , மகரி, சந்திர ஹாரம், வயிர 3 அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை முன் மார்பில் சாற்றிக் கொண்டு, பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி, சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.