மானாமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் : உற்சவர் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2022 02:12
மானாமதுரை: மானாமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் கடந்த கார்த்திகை மாத பிறப்பின் போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை துவங்கினர்.இதனைத் தொடர்ந்து வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோயிலில் பஜனை வழிபாடு நடந்து வந்தது.இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு யானை வாகனத்தில் எழுந்தருளி ஐயப்ப சுவாமிகள் 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று நடைபெறும் மண்டலாபிஷேக பூஜையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்துள்ளனர்.