திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2022 06:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கல்களம் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் இன்று நடந்தது. கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தில் இருந்து இன்று காலை வரை நடந்த மண்டல பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, யாகசாலை பூஜை முடிந்து மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலிலுள்ள மற்ற மூலவர்கள் மீனாட்சி அம்மன், சொக்கநாதர், வள்ளி, தெய்வானை, முருகன், கருப்பசாமி, ஆஞ்சநேயர், விநாயகர், சண்டிகா துர்கா பரமேஸ்வரிக்கு அபிஷேகம், பூஜை, அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.