திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோயிலில் பகல்பத்து படியேற்ற நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2022 09:12
மயிலாடுதுறை: ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தமிழ் பாசுரங்களை பாடி மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற பகல்பத்து 7ம் நாள் படியேற்ற நிகழ்ச்சியில் பரிமள ரெங்கநாதர் மரகத கிரீடம், தங்க வாள் ஏந்தி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22 ஆலயமுமான பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தின் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 23ம் தேதி துவங்கி பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகின்றது. பகல்பத்து விழாவின் 7ம் நாளான இன்று பெருமாள் மரகத கிரீடம் அணிந்து இடையில் தங்கவாள் மற்றும் வீல் ஏந்தி ராஜ அலங்காரத்தில் புறப்பட்டு உள்பிரகார வீதியுலா வந்தார். திருவந்திக்காப்பு மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து படியேற்ற சேவை நடைபெற்றது. அப்போது பட்டாச்சாரியார்கள் பக்தர்கள் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களை ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு பாசுரங்களை.பக்தி பரவசத்துடன் பாடி கூட்டாக வழிபாடு செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.