பதிவு செய்த நாள்
30
டிச
2022
09:12
சிவகாசி: கோவை ஈஷா யோகா மையம் சார்பில் சிவகாசி வந்த ஆதியோகி ரதத்துக்கு மக்கள், பக்தர்கள் வரவேற்பு அளித்து, வழிபட்டனர்.
கோவை ஈஷா யோகா மையம் சார்பில் 2023 பிப். 18 ல் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சிக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும், மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடும் விதத்தில் தமிழகம் முழுவதும் ரத ஊர்வலம் நடந்து வருகிறது. அதன்படி ரத ஊர்வலம் மல்லியில் துவங்கி கிருஷ்ண பேரி, ஈஞ்சார், சிங்கம்பட்டி, விளாம்பட்டி சிவகாசி வந்தது. சிவன் கோயில் முன்பு ரதம் நிறுத்தப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இங்கிருந்து விஸ்வநத்தம், தாயில்பட்டி மடத்துப்பட்டி, சித்துராஜபுரம் , ரிசர்வ் லைன், வெள்ளையாபுரம் , திருத்தாங்கல், அனுப்பங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தரிசனத்திற்காக ஆதியோகி சிலையின் ரத ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ்பாபு, வசந்த் செய்தனர்.