பதிவு செய்த நாள்
31
டிச
2022
11:12
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் உள்ளது சாஸ்தா-கிருஷ்ணர்-சிவன் கோவில்கள். இங்கு 1963ல் ஆரம்பித்த தர்ம சாஸ்தா உற்சவம் டிரஸ்ட், சார்பில் மார்கழி மாதத்தில் நடத்தும் ஐயப்ப மஹோத்சவம் மிகவும் பிரபலம்.
கடந்த 78 ஆண்டுகளாக டிரஸ்ட் இந்த உற்சவத்தை நடத்தி வருகின்றன. நடப்பாண்டு உற்சவத்தையொட்டியுள்ள ரதோற்சவவும் சாஸ்தாபிரீதியும் நேற்று இன்றுமாக நடக்கின்றன. முன்னதாக உற்சவ நிகழ்ச்சிகள் கடந்த டிச., 21ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் ஆரம்பித்தன. தொடர்ந்து இக்கோவில்களில் பிரதோஷ விளக்கு, தன்வந்திரி ஹோமம், நவகிரஹசாந்தி ஹோமம், மஹாருத்ரம், ருத்ராபிஷேகம், வாஸ்துசாந்தி ஹோமம், துவஜாரோகணம், வேதபாராயணம், உத்சவபலி, உற்சவமூர்த்திகள் கருட-அஸ்வ-கஜ-வியாகிர வாகனத்தில் எழுந்தருளல், பூர்ணாபிஷேகம், வசோர்தார, புருஷசூக்தஹோமம், பகவதி சேவை ஆகியவை நடைபெற்றன. உற்சவ சிறப்பின் முதல் நாளான நேற்று காலை சாஸ்தா கோவிலில் லட்சார்ச்சனை, வேதபாராயணம், ருத்ராபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 4.30 மணியளவில் நாராயண சர்மாவின் தலைமையில் பஞ்சவாதியம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த வைபவம் நடந்தன. இதையடுத்து நடந்த உற்சவபலியடுத்து 7 மணியளில் புஷ்ப பல்லத்தில் உற்சவர் தெரு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உச்சவச் சிறப்பின் இரண்டாவது நாளான இன்று (31ம் தேதி) காலை 6 மணிக்கு திருமஞ்சனம், ருத்ராபிஷேகம், மகாநிவேத்தியம், மகாதீபாராதனையடுத்து 11.15 மணியளில் உற்சவ மூர்த்திகளின் ரதாரோகணம் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. தொடர்ந்து தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு பஞ்சவாத்தியம் முழங்க திருத்தேரோட்டம் நடைபெறும். நாளை (1ம் தேதி) நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் மதோத்சவம் நிறைவுபெறும்.