பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பகல் பத்து உற்சவத்தில் நாளை மாலை பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலிக்க உள்ளார். இக்கோயிலில் பகல் பத்து உற்சவம் டிச., 23 முதல் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் ஏகாதசி மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து 10 ம் நாளான நாளை மாலை 4:30 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் அலங்காரமாகி வீதி வலம் வருவார். பின்னர் 6:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, ஜன., 2 காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது.