கோவில் வளாகத்தில் கேரி பேக் வேண்டாமே : பக்தர்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 06:12
அனுப்பர்பாளையம்: பாலிதின் பை மற்றும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனையொட்டி, திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் பக்தர்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் கோவில் வளாகத்திற்குள் பாலிதின் பைகளை பயன்படுத்த வேண்டாம். என கோவில் முன்பு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளில் தேங்காய், பழம், பூ, ஆகிய பூஜை பொருட்களை வாங்கி வர வேண்டாம். அவ்வாறு வாங்கி வந்தால் கோவில் பணியாளர் மூலம் பறிமுதல் செய்யப்படும். பூஜை பொருட்களை கூடைகள், துணி பைகள், ஆகியவற்றில் கொண்டு வர கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.