சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று மலைமீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 06:12
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சுற்று சுவர் இடிந்து செப்பனிடும் பணி நடந்து வருவதால் வைகுண்ட ஏகாதசியன்று மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியன்று 25 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். இக்கோவிலில் சில மாதம் முன்பு பக்தர்கள் செல்லும் வழியில் மதில் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அத்துடன் தரைப்பகுதியிலும் மண் சரிவு ஏற்படுட்டுள்ளது. இந்நிலையில் கோவிலில் நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு. மலை மீதுள்ள சுற்று சுவர் சரிந்து விழுந்ததை தொடர்ந்து செப்பனிடும் பணிகள் நடந்து வருவதால் வரும் 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலை மீது பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் உற்சவர் சிலைகள் அலங்காரம் செய்து மலை அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.