சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு சிவானந்த நாயகி சமேத தில்வநாயகர் சோமஸ் ஸ்கந்தர் சுவாமிக்கு சுமார் 300 கிராம் எடையுள்ள ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க கவசம் பக்தரால் வழங்கப்பட்டு வெள்ளிக்கிழமை சாத்தப்பட்டது. உபயதாரர் சிவரத்னா டிரஸ்ட் மூலம் காணிக்கையாக இந்த தங்க கவசம் வழங்கப்பட்டசு. சிவராஜசேகர் தீட்சிதர், பாஸ்கர் தீட்சிதர் மற்றும் அவரது சகோதரர்கள் முன்னிலையில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர்கோவில் உள்ள சிவானந்த நாயகி சமேத தில்வநாயகர் சோமஸ் ஸ்கந்தர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் செய்து வெள்ளிக்கிழமை அன்று அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் வீதிஉலாவின் போது சிவகாசசுந்தரி சமேத நடராஜ பெருமானுடன் தங்க கவசத்தில் சோமஸ்கந்தன் வீதி வளம் வந்தார். நடராஜப்பெருமானுடன் தங்க கவசத்தில் சோமஸ்கந்தர் வீதி வலம் வந்தார்.