பெரியகுளம் பகுதியில் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 02:01
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3: 30 மணிக்கு வரதராஜாப் பெருமாளுக்கு அனைத்து வகையான பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை வாசித்தல், மார்கழி மாத பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா நாமம் ஒலிக்க சொர்க்கவாசல் வழியாக வரதராஜபெருமாள் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உற்சவர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
* வடகரை கோதண்டராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. காலையில் கருடாழ்வார் வாகனத்தில் உற்சவர் வீதி உலா சென்றார். பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் 800 மீட்டர் தொலைவில் வீதி உலா சென்று கோதண்டராமரை எதிர்சேவையாக தரிசித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர் பாலாஜி செய்திருந்தார். * லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் லட்சுமி நாராயண பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் ராமானுஜர் செய்திருந்தார். * நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பல மணிநேரம் ஹரேராமா நாமகீர்த்தனை பாடப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.