பதிவு செய்த நாள்
03
ஜன
2023
04:01
அவிநாசி: அவிநாசி அடுத்த சேவூர் அருகே குட்டகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி உடனமர் மொக்கணீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் ருத்ராட்ச பந்தல் அமைத்து கணபதி ஹோமம், புண்ணியாஜனம், பஞ்சகவியம், மூலமந்திர ஹோமம்,ருத்ர பாராயணம், வேத பாராயணம்,திருமுறை பாராயணம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகளுடன் பால், தயிர், பண்ணீர், தேன், பஞ்சாமிர்தம் ,சந்தனம் உள்ளிட்ட 18 திரவியங்களில் ஸ்ரீ மீனாட்சி சமேத மொக்கனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ருத்ராட்ச பந்தல் அமைத்து108 சங்காபிஷேகம் நடைபெற்றது .அதனையடுத்து மஹா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.