திருநள்ளாறு நள நாராயண பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 04:01
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு பகுதியில் உள்ள ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை திருப்பள்ளி முடிந்து ஸ்ரீ நளநாராயண பெருமாள் ஸ்ரீதேவி. பூதேவி சமேதராக தங்க கவச ஆலயத்தில் பரமபத வாசல் வழியாக எழுந்தருதில் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.பின்னர் நள நாராயண பெருமாள் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். மேலும் பல்வேறு பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.