திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மணம்ண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 450 வது ஆராதனை விழாவின் 3ம் நாளான நேற்று அதிர்ஷ்டம் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.
பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தில் பீடாதிபதி ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தாவனம் திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ளது. இவரது 450 வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, விழாவின் 3ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம், 5:00 மணிக்கு ஸ்ரீ மூலராமர் சிறப்பு பூஜை, 7:00 மணிக்கு பிருந்தாவனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாதீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து 3:00 மணிக்கு மேல் உபன்யாசம், பஜனை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவுப்படி, பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாச்சாரிய சிம்மலகி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.