பதிவு செய்த நாள்
06
ஜன
2023
11:01
திருவண்ணாமலை: மார்கழி மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கானோரும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்கழி மாத பவுர்ணமி திதி, இன்று அதிகாலை, 2:26 முதல், இன்று அதிகாலை, 4:20 மணி வரை காணப்பட்டது. இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், நேற்று அதிகாலை முதல், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.