கும்பாபிஷேகம், தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2023 03:01
ஒட்டன்சத்திரம்: பழநியில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்திற்கு பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அசோசியேசன், மதுரை ரயில்வே டிவிஷனல் மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஜன.27ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்பவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் தைப்பூச திருவிழாவிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கும், கோவையிலிருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநிக்கும், மதுரையிலிருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கும் சிறப்பு ரயில்களை (இரு மார்க்கங்களிலும்) ஜன.16 முதல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதலாக நான்கு ரிசர்வேஷன் பெட்டிகளை இணைக்க வேண்டும், என மதுரை டிவிஷனல் மேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.