உலக சாதனைக்கு 500பொங்கல் பானை வைத்து மாணவர்கள் பொங்கல் கொண்டாடினர்.
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2023 03:01
காரைக்கால்: காரைக்காலில் தனியார் பள்ளியில் உலக சாதனைக்காக மாணவர்கள் 500பொங்கல் பானை வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
காரைக்கால் பூவம் நண்டலாறு பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்குளோபல் பள்ளியில் உலக சாதனையாக அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து 500 பொங்கல் பானை வைத்து சமத்துவ பொங்கல்கொண்டாடினர். முன்னதாக சமத்துவ பொங்களை கல்வித்துறை முதன்மைக்கல்வி அதிகாரி ராஜசேகரன் துவக்கி வைத்தார்.பின்னர் மாணவர்கள் மண்பானை வைத்து தமிழ் பாராம்பரியத்தை போற்றும் வகையில் பச்சரிசி வெள்ளம் இட்டு பொங்கல் வைத்து கோலாகளமாக கொண்டாடினார்.பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரே இடத்தில் மதநல்லிணத்துக்கு எடுத்துரைக்கு விதமாக அனைவரும் ஒற்றுமையாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினார்.பின் பள்ளியில் மாணவர்களுக்கு ஆய்வுக்கூடங்கள் திறக்கப்பட்டது.இதில் ஏராளமா பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டவர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சிறப்பாக கொண்டாடினர்.