கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணப்பட்டத்தில், 6.52 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. கடலுார் , திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் சமேத பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் 10 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் பரமேஸ்வரி முன்னிலையில் நேற்று உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் ஊழியர்கள் 6 பேர் உட்பட 30 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், திருப்பணி உண்டியலில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 686 உட்பட மொத்தம் ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் பக்தர்கள் காணிக்கை இருந்தது. மேலும், 5 கிராம் தங்கம், 83 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. இக்கோவிலில் கடந்த ஆண்டு அக் டோபர் 18ல் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.