திருவண்ணாமலையில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2023 08:01
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ நிறைவு விழாவில் நிறைவு விழாவில், நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு, தாமரைக் குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவிலில், உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ பத்தாம் நாள் நிறைவு விழாவில், நேற்று தாமரைக் குளக்கரையில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரியில் சிறப்பு சந்தனம் அபிஷேக நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள தங்கும் விடுதியில், சேலை கட்டிக்கொண்டு வெளிநாட்டுப் பெண்கள் பொங்கல் விழா கொண்டாடினர்.