Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூரில் 1,008 பால்குட விழா ... மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2023 மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2023
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்
எழுத்தின் அளவு:
சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
11:01

தஞ்சாவூர்: சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை இளைஞர்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் என மும்பை ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி அபரேஷானந்தா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலுக்கு வருகை தந்த மும்பை ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி  சுவாமி அபரோஷானந்தா, சேலம் சுவாமி சத்யேஸ்வரானந்தா, திருவண்ணாமலை சுவாமி மாத்ரு சேவானந்தா ஆகியோரை எம்.எல்.ஏ. அன்பழகன் வரவேற்று மரியாதை செய்தார். தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதை நினைவு கூறும் விதமாக , புதிதாக  நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அபரோஷானந்தா சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது; சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு வந்த போது தான் எழுமின், விழிமின் என்ற அறை கூவல் விடுத்தார். தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கையும்,  எதிர்பார்ப்பும் கொண்டிருந்ததால் தான் அத்தகைய கருத்தை அவர்  வெளிப்படுத்தினார்.

தமிழகத்தைச் சேர்ந்த பலரும் விவேகானந்தரின் கருத்துக்கள் மீது  மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை இளைஞர்களிடத்தில் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். தேசபக்தியும், தெய்வபக்தியும் அவசியம் என்பதை வளரும் தலைமுறைக்கு கற்றுத் தர வேண்டியது அவசியம். அதற்கான செயல் திட்டங்களை பள்ளிப் பருவம் முதல் செயல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி பாடங்களில் நன்னெறி வகுப்புக்கள் அவசியம் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன், கண்ணன், ரவி, பாலாஜி, சோழமண்டல விவேகானந்த சேவா சங்கத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar