மேட்டுப்பாளையம்: காரமடை அருகே கன்னார்பாளையத்தில் உள்ள, அம்பாள் சாரதாம்பிகை கோவிலில், தைப்பொங்கல் விழா மற்றும் 37ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு நடந்தது. மகேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தார். நாகப்பன் தலைமை வகித்தார். விழா தலைவர் நஞ்சப்பன், செயலாளர் ராஜமாணிக்கம், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் பலர் பங்கேற்று பேசினர். சித்தி விநாயகருக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மகா சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், 37ம் ஆண்டை தொடர்ந்து, ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் தைப்பொங்கல் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சீனிவாச பெருமாளுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்பு அம்பாள் சாரதா அம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம், கோல போட்டிகள், குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகள், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.