சதுரகிரியில் தை பிரதோஷம், அமாவாசை வழிபாடு; நாளை முதல் 4 நாட்கள் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2023 08:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் (ஜன.19 முதல் 22) முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது நாளை (ஜன. 19) பிரதோஷத்தை முன்னிட்டும், ஜனவரி 21 தை அமாவாசையை முன்னிட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தை அமாவாசை வழிபாடு என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வரலாம் என்பதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. வனத்திற்கோ, வனவிலங்கிற்கோ பாதிப்பு இல்லாமல் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழக்கம் போல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.