பதிவு செய்த நாள்
19
ஜன
2023
11:01
பழநி: பழநி, மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிக்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கின.
பழநி, மலைக்கோயில் படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26,லும், மூலவர் சன்னதிக்கு ஜன.27,லும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின. நேற்று மாலை 4:00க்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன்பின் மங்கல இசை, கும்பகோணம் வைத்து பூஜை நடைபெற்றது. கணபதி, சிவனிடம் அனுமதி பெறுதல். இறைவனிடம் அனுமதி பெறுதல். திருவொளி வழிபாடு, திருநீறு திருவமுது வழங்குதல் நடைபெற்றது. தமிழ் ஓதுவார்கள் வேத விற்பனர்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் முழங்கினர். இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், இணை ஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (ஜன.19.,) காலை 9:00 மணி மாலை 6:00 மணிக்கு பூஜைகள் நடைபெற உள்ளன. ஜன,26,27ல் மலைக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜன.27,ல் மலைக்கோயில் மூலவர் சன்னதிக்கு நடைபெறும் கும்பாபிஷேகத்தில் பங்கு பெற இணையதள முன் பதிவு நடைபெற்று வருகிறது.