சூலூர்: குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சனிப்பெயர்ச்சி பரிஹார ஹோமம் நடந்தது. சூலூர் அடுத்த குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சனிப்பெயர்ச்சியை ஒட்டி நேற்று பரிஹார ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. முன்னதாக பல்வேறு கோவில்கள், நவக்கிரஹ கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் பூஜிக்கப்பட்டு, சனிப்பெயர்ச்சி பரிஹார ஹோமம் நடந்தது. பின்னர், பல்வேறு திரவியங்களால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. அலங்கார மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.