மணக்குள விநாயகர் கோவிலில் மத்திய அமைச்சர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2023 05:01
மணக்குள விநாயகர் கோவிலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில், பங்கேற்க வந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சென்னை தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா, புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், ஆகியோர் நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்பொழுது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு, அமைச்சர் லட்சுமி நாராயணன் கோவில் அறங்காவல் குழு சார்பில் நினைவு பரிசு வழங்கினார். இதில், ராமலிங்கம் எம்.எல்.ஏ.,அறங்காவலர் குழுவினர் நிர்வாக அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.