பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகளை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் ஜன 26 27 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது இதில் தற்போது கும்பாபிஷேக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கும்பாபிஷேக பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் யாகசாலை தங்க கோபுரம் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார் . அமைச்சர் படிப்பாதை வழியாக மலைக்கோயில் வந்து சென்றார். இதில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகளை அரசு விழா என கருதாமல் தங்கள் சொந்த விழாவாக கருதி அதிகாரிகள் கள ஆய்வு செய்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மலைக்கோயிலில் யாக சாலையில் 90 வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 33 கேள்வி குண்டங்கள் முருகப்பெருமானுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் 6000 நபர்கள் கும்பாபிஷேக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதில் இணையதளத்தில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 3000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை வாகனங்களை நிறுத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் மருத்துவ வசதிகளுக்காக ஆங்காங்கே தற்காலிக மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்து இணை ஆணையர்கள், ஐந்து துணை ஆணைவர்கள் பல அதிகாரிகள் கும்பாபிஷேகப் பணிக்காக நியமிக்கப்பட உள்ளனர். இதுவரை 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய உள்ளனர். பழநி திருக்கோயில், 53 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது ரோப் கார் திட்டம் ஆய்வில் உள்ளது. இடும்பன் மலை மற்றும் மலைக்கோயில் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டம் பெருந்திட்ட வரையில் உள்ளது. திருச்செந்தூரில் 300 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெறும் எனக் கூறியதை நிறைவேற்றி உள்ளோம் கும்பாபிஷேக தரிசிக்க அடிவாரம் பகுதியில் 16 இடங்களில் எல்.இ.டி., துறைகள் பொருத்தப்பட உள்ளன." என்றார். அவருடன் ஹிந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன், திண்டுக்கல் கலெக்டர் விசாகன், பழநி ஆர்.டி.ஓ., சிவக்குமார், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பழநி மலைக்கோயில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.