காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா: அறங்காவலர் குழு கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2023 07:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி மாதம்) 13ம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்வத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்று ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தெரிவித்தார் .ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்திற்கு அஞ்சூரு.தாரக சீனிவாசுலு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது .இந்த அறங்காவலர் குழு கூட்டத்திற்கு முக்கிய விருந்தினராக ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை வெற்றியடைய செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர் .மேலும் அறங்காவலர் குழுவில் 30 அம்ச தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்றினர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ.மதுசூதன் ரெட்டி பேசுகையில் இவ் ஆண்டு வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்காக நாலு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சிவராத்திரி பிரம்மோற்சவ உற்சவத்தை யொட்டி 46 புதிய பணிகளை செய்து வருவதாகவும் அறிவித்தார் . மேலும் இப்பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக கைலாச கிரிவலத்திற்காக சிமெண்ட் சாலைகள் அமைத்து வருவதாகவும் இதற்காக இதுவரை 15 கிலோ மீட்டர் தூரம் வரை பணிகள் நிறைவடைந்ததாகவும் மீதமுள்ள சாலை பணிகள் ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் இந்த பிரச்சினையை தீர்க்கப்பட்டு முடிந்தவரை விரைவாக பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவு செய்வதாக தெரிவித்தார் .ஆந்திர மாநிலத்தில் எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளர்ச்சி பணிகள் செய்வதையே தங்களின் லட்சியமாக கருதி செய்து வருவதாக தெரிவித்தார் .மேலும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி புனித தினத்தில் பக்தர்கள் வசதிக்காக எந்தவித இடையூறும் இன்றி கடந்த ஆண்டைப் போலவே மகா லகு" தரிசனம் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார் .இதனால் சாதாரண பக்தர்களுக்கும் எந்தவித இடையூறும் இன்றி விரைவு தரிசனத்தோடு ஏராளமான பக்தர்கள் சாமிக தரிசனம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார் .மேலும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது கோயிலில் பலவித மலர்களாலும் சிறப்பு மின் விளக்குகளாலும் கடந்த ஆண்டுகளை கருத்தில் கொண்டு இவ்வாண்டும் சிறப்பாக செய்ய உள்ளதாக தெரிவித்தார் .
இன்று நடந்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் ஸ்ரீ காளஹஸ்தியில் கொண்டமிட்டா பகுதியில் உள்ள சித்துலய்யா சுவாமி கோயிலை நவீன வடிவமைப்பு செய்வது , சுவாமி அம்மையார்கள் கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள பனசகோனோ பகுதியை சீர்படுத்துதல் மேலும் சிவன் கோயில் துணைக்கோயில் ஆன (வெய் லிங்கால கோனா )ஆயிரம் லிங்க கோன புதிய கோபுரத்தை கட்டப் படுவது, சுவாமி அம்மையார்களின் கிரிவலப் பாதையில் உள்ள மயூரி தீர்த்தம் (குளம்)பகுதியை நவீன படுத்துதல் இதே போல் சுகப்பிரம்மாசிரமம் அருகில் உள்ள குலத்தை சீர்படுத்துதல், கிரிவலப் பாதையில் உள்ள எதுர்சேவா மண்டபத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், (சாமி அம்மையார்களை) உற்சவமூர்த்திகளை சுமந்து செல்லும் கூலிகளுக்கு (டிரஸ் கோட்) யூனிபார்ம் சீருடை அமல் செய்வது, மேலும் சிவன் கோயில் சார்பில் கோமட்டிவானி குண்டா இடத்தில் புதிய திருமண மண்டபம் கட்டுவது சிவன் கோயில் துணை கோயில்களில் இன்வெர்ட்டர்ஸ் ஏற்பாடு செய்வது . சுப்பிரமணிய சுவாமி பிரம்மோற்சவத்தில் மரக் கட்டையினால் செய்யப்பட்டுள்ள பல்லக்குகளுக்கு பதில் வெள்ளி பல்லக்குகளை ஏற்பாடு செய்வது, வியாச (மாசி)பௌர்ணமி அன்று பஞ்சமூர்த்தி உற்சவத்திற்காக நிரந்தர மண்டபத்தை ஏற்பாடு செய்வது இதே போல் கார்த்திகை மாதத்தில் வரும் சொர்ணமுகி நதி ஆரத்தி களுக்காக சொர்ணமுகி நதிக்கரையில் 5 (திம்மை ) கல் தூண்கள் ( சிமெண்ட் யினால்) அமைப்பு யாகசாலை அஷ்டோத்திர கலாசாபிஷேகத்திற்கு 108 கலசங்களை வெள்ளியினால் செய்வது, கோயிலில் நித்யம் நடக்கும் தீபாராதனைகளுக்கு வெள்ளி ஆரத்திகள் தற்போது ரதம், சக்கரம் ,கும்பம், ஹாரதிகள் பழுதடைந்து இருப்பதால் மீண்டும் அதனை வெள்ளியினால் புதியதை செய்வது இது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பாக சுவாமி அம்மையார்கள் மூலவர் சன்னதி தரிசனத்திற்காக பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது .மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் கண்ணப்ப சுவாமிக்கு (சிறிய வண்டி) நான்கு சக்கர வண்டி தமரக்கம் வைத்து செல்ல சிறிய வண்டியை ஏற்பாடு செய்வது உட்பட 30 அம்ச தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டது.