திருப்புல்லாணி: திருப்புல்லாணி சாலை தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயில் புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் முதல் காலை யாகசாலை பூஜையுடன் வேதபாராயணம், ரக்ஷாபந்தனம், கும்பஸ்தானம், பூர்ணாகுதி, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பின்பு காலை 10:30 மணி அளவில் கோபுர விமான கலசத்தில் பாபு சாஸ்திரி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் புல்லாணி மாரியம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.