ஒட்டன்சத்திரம்: தைப்பூசத்திற்கு விரதம் இருந்து பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்காக ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பர் சன்னதி அருகே அங்காள பரமேஸ்வரி கே.டி. மஹால் என்ற திருமண மண்டபத்தில் பழநி முருகன் அன்னதான கூட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடில் தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களால் ஒன்றிணைந்து நடத்தப்படுகிறது. வரும் பிப். 1 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்கி பிப்.2 மாலை வரை நடக்கிறது. மாலை காப்பி, இரவு சிற்றுண்டி அதிகாலைக் காப்பி, காலை சிற்றுண்டி மதியம் தலை வாழை இலையில் சாப்பாடு மற்றும் 5 ஆயிரம் துணிப்பைகளில் பழங்கள்,13 ஆம் பிஸ்கட் வழங்கப்படுகிறது. பிப்.2 ம் தேதி காலை 9 மணிக்கு வேல் அபிஷேகம், வேல் மாறல் பாராயணம் கூட்டு வழிபாடும் நடக்கிறது. இந்த குடிலை 13வது ஆண்டாக நடத்துகின்றனர் குத்துவிளக்கு ஏற்றி அன்னதானத்தை துவக்கி வைக்கும் வாய்ப்பு அதிக ஆண்டுகளாக பாதயாத்திரை வரும் பக்தர்களை தேர்ந்தெடுத்து அளிக்கப்படுகிறது. பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய பக்தர்களை ஒன்றிணைத்து பெரிய அளவில் அன்னதானத்தை ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்பதே இந்த குழுவின் தாரக மந்திரம்.