அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ சிவ சூரிய பெருமானுக்கும் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் பெருமானுக்கும் ஷோடச திவ்ய அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகர பெருமான் சூரிய பிரப வாகனத்தில் எழுந்தருளி உபச்சார வேத மந்திர திருமுறை பாராயணங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.