காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா : அழைப்பிதழ் வெளியிடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2023 08:01
திருப்பதி : காளஹஸ்தி சிவன் கோயிலில் அடுத்த மாதம் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அழைப்பிதழ்களை ( சுவரொட்டிகளையும்) இன்று வெளியிட்டனர் .முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டனர் .தொடர்ந்து கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு அழைப்பிதழ்களை சுவரொட்டிகளையும் வெளியிட்டார். இதில் சாகர் பாபு பேசுதையில் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை வெற்றியடைய செய்ய ஒவ்வொருவரும் (கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரினார். இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்களான சம்பந்தம் குருக்கள் ,கருணா குருக்கள் கோயில் அதிகாரிகள் நாகபூஷ்ணம், சதீஷ் மல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வழக்கமாக மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவ சுவரொட்டிகள் மற்றும் அழைப்பிதழ்களை ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மற்றும் அறங்காவலர் குழு தலைவர் முன்னிலையில் வெளியிடுவது வழக்கம் .ஆனால் இந்த ஆண்டு எம்எல்ஏ மற்றும் அறங்காவலர் குழு தலைவர் இல்லாமல் கோயில் அதிகாரிகள் பிரம்மோற்சவ அழைப்பிதழ்களையும் சுவரொட்டிகளையும் வெளியிட்டனர். அழைப்பிதழ்களை வெளியிடும் சமயத்தில் இருவரும் உள்ளூரில் இல்லாமல் இருந்ததே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளன. சுவரொட்டிகளை வெளியிடும் சமயத்தில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் அறங்காவலர் குழு தலைவர் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல தரப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.