பதிவு செய்த நாள்
30
ஜன
2023
08:01
சூலூர்: கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், கொடியேற்றத்துடன் தைப்பூச தேரோட்ட விழா பூஜைகள் துவங்கியது. கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காட்டில் உள்ள சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு தைப்பூச தேர் திருவிழா பூஜைகள், கணபதி ஹோமத்துடன் கடந்த, 27 ம்தேதி துவங்கியது. இரவு கிராம சாந்தி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு, சென்னியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகமும்,, 7:35 மணிக்கு, திருத்ததேருக்கு முகூர்த்த கால் பூஜை நடந்தது. காலை, 10:45 மணிக்கு திருக்கொடியேற்றம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. வரும், பிப்., 4 ம்தேதி வரை காலை திருவீதி உலாவும், மதியம் அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, வள்ளியம்மை திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு யானை வாகனத்தில் முருகன் திருவீதி உலா நடக்கிறது. பிப்., 5 ம்தேதி, காலை, 6:00 மணிக்கு, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை, 4:00 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.