பதிவு செய்த நாள்
30
ஜன
2023
08:01
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர்,மு.தூரி,கிடாத்திருக்கை, இளஞ்செம்பூர்,ஏனாதி, வெண்ணீர்வாய்க்கால்,காக்கூர், பூக்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர். முதுகுளத்தூர் சரவணா பழனி பாதயாத்திரை குழுவின் சார்பில் முதுகுளத்தூர் வழிவிடு முருகன் கோயிலில் இருந்து காவடி எடுத்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்வி அம்மன் கோயில், முருகன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில் உட்பட முக்கிய விதிகளில் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.பின்பு முதுகுளத்தூரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக காவடியுடன் புறப்பட்டனர். முன்பாக முதுகுளத்தூர் வழிவிடு முருகன் கோயிலில் மூலவரான முருகனுக்கு பால்,சந்தனம், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சரவணா பழனி பாதயாத்திரை குழுவினர் செய்தனர். பாதயாத்திரை செல்லும் வழிகளில் பொதுமக்கள் பாதபூஜை செய்து பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.