பதிவு செய்த நாள்
31
ஜன
2023
11:01
தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் நடந்தது. தைத்திருவிழா சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து பதினொரு நாட்கள் நடந்தது. 1ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணி விடையும் , தொடர்ந்து யுகப்படிப்பும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் துவங்கியது. தலைமை குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
தேரோட்டம்: அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவசிவா அரகரா என்ற பக்தி கோஷமிட்டவாறு தேர் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில், குமரி, நெல்லை , துாத்துக்குடி, சென்னை ,
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், பன்னீர் ஆகியவைகள் அடங்கிய பொருள்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வ ரிசையில் காத்திருந்தனர். அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடந்தது. பின்னர் 6 மணியளவில் திருத்தேர் நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொ ண்டனர். ரிஷப வாகனத்தில் வலம் திருத்தேர் பணிவிடைகளை குருமார்கள் ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், பையன் நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் செய்து இருந்தனர்.